மரக்காணம் கோட்டகுப்பம் பகுதிகளுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு வருகை.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்ஜல் புயலானது காரைக்கால் மகாபலிபுரம் அருகே இன்று கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதனை மரக்காணம், அனுமந்தை குப்பம், கோட்டக்குப்பம், பிள்ளை சாவடி, தந்திராயன்குப்பம், கீழ் புத்துப்பட்டு, பொம்மையார்பாளையம், மற்றும் இதனைச் சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது மேலும் கடலின் சீற்றம் சுமார் 8 அடிக்கு மேல் உயர்ந்து சீறிப் பாய்கிறது இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்திருந்தார் இந்த நிலையில் சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு 25 பேர் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் பொம்மையார்பாளையத்தில் உள்ள மயிலம் எஸ் எஸ் கல்லூரிக்கு குழுவானது வந்துள்ளது அந்த குழுவினரை மாவட்ட வருவாய் வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் பேரிடர் காலத்தில் பொது மக்களை மீட்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
Tags : மரக்காணம் கோட்டகுப்பம் பகுதிகளுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு வருகை.