பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா

by Staff / 16-03-2023 11:46:50am
பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய அட்டென்டர் கைது செய்யப்பட்டார். மொடக்கல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த ஊழியராக சந்தன் ராஜ் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். உடை மாற்றும் அறையில் மொபைல் போனை வைத்துவிட்டுச் சென்றதை கண்ட பெண் ஊழியர்கள் அளித்த புகாரை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். குற்றவாளியை கைது செய்த அத்தோளி காவல் நிலைய எஸ்.ஐ. ராஜீவ், சொந்த பிணையில் விடுவித்தார்.

 

Tags :

Share via

More stories