by Staff /
05-07-2023
02:26:50pm
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டுக்கான இலச்சினையை (லோகோ) எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மதுரையின் அடையாளமாக வைகை அணை, ஜல்லிக்கட்டுக் காளை ஆகிவற்றின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
Tags :
Share via