ஆம் ஆத்மி எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா
குஜராத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 182 தொகுதிகளில் 156 இடங்களை கைப்பற்றி பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களை கைப்பற்றியிருந்தது. இதில் விசாவதார் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பூபேந்திர பயானி வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதிவியேற்றார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி இன்று காலை குஜராத் சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை குடுத்தார். இதனையடுத்து அவரது ராஜினாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
Tags :