திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.சஸ்பெண்ட் 

by Editor / 24-07-2021 04:46:02pm
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.சஸ்பெண்ட் 



மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வின் கையில் இருந்த காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாநிலங்களவையில்  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு (இஸ்ரேல் நிறுவனத்தின் மென்பொருள் மூலம் இந்தியாவில் நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் டெலிபோன் ஒட்டு கேட்டதாக) விவகாரம் தொடர்பாக விவாதம் நடந்தபோது விளக்கம் அளிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் எழுந்தார்.


அப்போது, அவர் கையில் வைத்திருந்த காகிதங்களை பறித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் கிழித்து எறிந்தார். இதையடுத்து, அவையில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இந்நிலையில் அவை ஒத்தி வைக்கப்பட்டது.மாநிலங்களவை தொடங்கிய திலிருந்தே பெகாசஸ் விவகாரம் தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமி்ட்டதால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் மீண்டும் அவை கூடியது. அப்போது மத்திய அமைச்சர் அஸ்வின் கையில் இருந்த காகிதங்களை பறித்து கிழித்து எறிந்த திரிணாமூல் எம்.பி. சாந்தனு சென் செயல் பெரும் கண்டனத்துக்குரியது, அவமரியாதைக்குரியது என்று பாரதீய ஜனதா கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து சாந்தனுவை அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 
மக்களவை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

 

Tags :

Share via