பணமோசடி: 5பேர் கைது.

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரும், ஆவடியைச் சேர்ந்த ரவிகுமார் என்பவரும் நண்பர்கள் ஆவார்.இந்நிலையில் ரவிக்குமார் தன் மகள் திருமண செலவிற்காக, வீட்டின் அசல் பத்திரத்தை ஜெகதீசனிடம் கொடுத்து, 13. 5 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதுடன், ஆறு மாதங்களில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிஉள்ளார்.இதற்கிடையில், அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து பணம் தருவதாகக் கூறி, ஜெகதீசனிடமிருந்து பத்திரத்தை வாங்கிய ரவிக்குமார், பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.இதுகுறித்து கேட்ட போது, குடும்பத்தினருடன் வந்த ஜெயக்குமார், தகாத வார்த்தைகளால் ஜெகதீசனை பேசி, தாக்க முயற்சித்துள்ளார்.இது குறித்து புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் மோசடியில் தொடர்புடைய ரவிகுமார், அவரது மனைவி மீனாட்சி, மகள் பிரேமலதா, மகன், பாலாஜி, உறவினர் நாதன், ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
Tags :