வன்முறையை தூண்டும் படம் எடுக்கின்றனர் - அண்ணாமலை

by Staff / 15-08-2023 12:30:18pm
வன்முறையை தூண்டும் படம் எடுக்கின்றனர் - அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு மக்களை ஒன்றினைக்கு விதமாக ['என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்நிலையில், 17வது நாளாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் யாத்திரையை தொடங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “வன்முறையை தூண்டும்படி எடுக்கும் சாதிய படங்களை முதல்வர் பாராட்டுகிறார் ரெட் ஜெயண்ட் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய ரீதியாக படம் எடுக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo