நீலகிரி தொகுதியில் களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள்

by Staff / 21-03-2024 01:26:05pm
நீலகிரி தொகுதியில் களமிறங்கும் நட்சத்திர வேட்பாளர்கள்

நீலகிரி (தனி) தொகுதியில் இந்த முறை நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் போட்டியிடுகிறார். அதே போல் பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட இருப்பதாக கூறப்படும் நிலையில், நீலகிரி தொகுதி நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதியாக மாறவுள்ளது. அதே போல் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த முறை விவசாயியான ஆ.ஜெயகுமார் போட்டியிடுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo