அடையாளம் தெரியாத 28 உடல்கள் தகனம்.

ஒடிசாவின் பாலசோரில் ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டு 4 மாதங்கள் ஆகியும் இதுவரை அடையாளம் காணப்படாத 28 பேரின் உடல்கள் விரைவில் தகனம் செய்யப்படவுள்ளதாக புவனேஷ்வர் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், 'உடல்கள் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் தகனத்திற்காக ஒப்படைக்கப்படும். நகரத்தில் உள்ள இரண்டு மயானங்களில் உடல்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்' என்றும் புவனேஷ்வர் மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பயங்கர ரயில் விபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Tags : அடையாளம் தெரியாத 28 உடல்கள் தகனம்.