31ந் தேதி முதல் ஏப்.2 வரை மழைக்கு வாய்ப்பு.

by Editor / 30-03-2023 08:11:24am
31ந் தேதி முதல் ஏப்.2 வரை மழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ந் தேதி முதல் ஏப்.2 வரை மேற்கூறிய இடங்களில், ஓரிரு பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26-27 டிகிரி செல்சியஸும் இருக்கும்.

 

Tags :

Share via

More stories