இன்று தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை

by Admin / 23-06-2026 12:33:11am
இன்று தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை

இன்று தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் வடதமிழகத்தின் ஓரிரு இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஜூன் 25 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மாவட்டங்களிலும் ஜூன் 26 நீலகிரி, கோயம்புத்தூர் ,திண்டுக்கல் ,தேனி, தென்காசி, திருநெல்வேலி ,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo