வெற்றி பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்- இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

by Admin / 05-10-2026 12:39:40am
வெற்றி பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்- இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

 தமிழக அரசு மகளிர் வெற்றிப் பயண திட்டத்தை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு பவானியைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் என் கலாமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியா பேருந்து உரிமையாளர் சங்கத்தின் சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ் ரூத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி அருள்முருகன் ஆகியோ அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.. மனுவில் முக்கிய கோரிக்கைகளாக அரசு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசமாக பயணிக்கும் திட்டத்தால் தனியா பேருந்து உரிமையாளர்கள் கடுமையான நிதி இழப்பை சந்தித்து தொழிலை முழுமையாக கைவிட வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் பெண் பயணிகளிடம் மட்டும் கட்டண வசூலிக்காமல் இருப்பது இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமைக்கு எதிரானது எனவும் இத்திட்டத்திற்காக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில் இதே போன்ற இழப்பீட்டை தனியார் பேருந்துகளுக்கும் வழங்கி வேண்டும் என்றும் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை வெற்றி பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo