கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சா் செங்கோட்டையன் உடல்நலக்குறைவால் அனுமதி
தமிழக வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன்உடல் நல குறைவின் காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நல குறைவின் காரணமாக அவர் நேற்று சென்னைக்கு செல்ல இருந்த நிலையில், பயணம் ரத்து செய்யப்பட்டு, இன்று திங்கட்கிழமை சென்னை செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















