மதுரையில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்கிற ஓர் இளைய பட்டாளம்

by Admin / 25-05-2026 12:45:13am
மதுரையில் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி என்கிற ஓர் இளைய பட்டாளம்

வேலையில்லாமல் சமூக ஊடகங்களில் தங்கள் நேரங்களை செலவிட்டு கொண்டிருக்கும் இளைஞர்களை எந்தத் தொழிலும் செய்ய தகுதியற்றவர்கள் கரப்பான் பூச்சிகளை போல எல்லோரையும் தாக்கத் தொடங்குகிறார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் இளைஞர்களை விமர்சித்ததை அடுத்து அவர் கருத்து இருக்கு பதில் வரைக்கும் விதமாக இணையத்தில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி. அமெரிக்க பாஸ்டன் யுனிவர்சிட்டி மாணவரும் அரசியல் வியூக நிபுணருமான அபிஜித் திப்கே என்பவரால் இணையத்தில் தொடங்கப் பட்டது தான்இந்த இயக்கம்.

வேலையில்லா திண்டாட்டம் தங்களின் குரல்கள் கவனிக்கப்படாமல் என்கிற இளைஞர்களின் ஆதங்க வெளிப்பாட்டை மீம்ஸ் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி தங்கள் உணர்வுகளுக்கு நியாயம் தேடும் களமாக இதை பயன்படுத்தி வருகின்றனர். கோடிக்கணக்கான  இளைஞர்களை ஈர்த்த இந்த இணைய இயக்கம் இப்பொழுது நிஜ களத்திலும் இறங்கி உள்ளது. மதுரையில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இளைஞர்கள் சிலர் கரப்பான் பூச்சி பேரணி என்னும் என்னும் நிகழ்வை நடத்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

 

Tags :

Share via
Logo