டிரம்ப் மீது மற்றொரு அவதூறு வழக்கு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை மரியாதை குறைவாக பேசிவிட்டதாக கூறி, கட்டுரையாளர் இ. ஜீன் கரோல் மீண்டும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இழப்பீடாக பத்து மில்லியன் டாலர்கள் கோரப்பட்டுள்ளது. முன்னதாக டிரம்ப் மீது அவதூறு வழக்கு தொடுத்த இ. ஜீன் கரோலுக்கு ஐந்து மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 1996 ஆம் ஆண்டில், மன்ஹாட்டனில் உள்ள பெர்க்டார்ஃப் குட்மேன் அடுக்குமாடி கடையில் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கரோல் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
Tags :



















