பிரியாணி கொடுக்காததால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து

by Staff / 17-08-2023 05:15:40pm
பிரியாணி கொடுக்காததால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வட்டம் 29- ல் ஓட்டல் நடத்தி வருபவர் கண்ணன். இவரது ஓட்ட லுக்கு காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் ஆகிய 2 பேர் வந்து பிரியாணியை கடனாக கேட்டு கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்பொழுது கடை உரிமையாளர் ஏற்கனவே வாங்கிய பிரியாணிக்கு பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார்.

அப்போது ஓட்டல் உரிமையாளருக்கும் விக்கி மற்றும் எழில் ஆகியோருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை யடுத்து எழில் கத்தியுடன் வந்து ஓட்டல் கடை உரிமையாளரான கண்ணனை கத்தியால் வெட்டி உள்ளனர். அப்போது அங்கு வந்த கண்ணன் தரப்பினர் விக்கி மற்றும் எழில் மீது தாக்கு தல் நடத்தியதாக கூறப்படு கிறது.

இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைர லாக பரவி வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories