கில்லி படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி!

by Editor / 12-05-2021 09:10:42am
கில்லி படத்தில் ஆதிவாசி கேரக்டரில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவுக்கு பலி!

செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோனா காரணமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துணை நடிகர் மாறன் நேற்றிரவு உயிரிழந்தார். 2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடித்தவர் துணை நடிகர் மாறன். ஆதிவாசி என்ற கேரக்டரில் அந்த படத்தில் நடித்த அவர்,  டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் . வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார்.

 

Tags :

Share via

More stories