சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 02-08-2021 09:47:23am
சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை வேளச்சேரி அடுத்த மேடவாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேடவாக்கத்தை சேர்ந்த கவுதம் (32) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வீட்டு வாயிலில் 4 விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் 3 பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு அவரது வீட்டுக்கு வெளியே பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மற்றம் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர்.

அப்போது , கவுதம் தன் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் மற்றும் பைக்குகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. மேடவாக்கம் மற்றும் அசோக்நகர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

புகாரின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் தடவியல் நிபுணர்களுடன் சம்பவம் இடத்திற்கு சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பக்கத்து வீட்டின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து செல்வது பதிவாகி உள்ளது. அவர்கள் யார் என விசாரித்து வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo