பைக்கில் கணவருடன் சென்ற பெண் தவறி விழுந்து பலி

ஈத்தாமொழி அருகே கேசவன்புதூரை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சரோஜா (வயது 60). சரோஜா குளச்சலில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வருவ தாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று முத்தை யாவும் அவரது மனைவி சரோஜாவும் தனது மோட்டார் சைக்கிளில் கேசவன்புதூரில் இருந்து குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ராஜாக்க மங்கலம் அருகே கல்லுக்கட்டி சந்திப்பு செல்லும்போது எதிர்பாராத விதமாக ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. இதில் அவர்கள் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் நாய் மீது மோதி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக பொது மக்கள் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரோஜா சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரு கின்றனர்.
Tags :