தனியாக சென்ற பெண்ணை ஆட்டோவில் கடத்தி கற்பழிக்க முயன்ற ஆட்டோடிரைவர் கைது.

விழுப்புரம் மாவட்டம்.திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கூட்டுப் பாதையில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருபவர் சரண்ராஜ். இவர் நேற்று இரவு வழக்கம்போல் அந்தப் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்துள்ளார். அப்பொழுது இளம் பெண் ஒருவர் தனது கணவனுடன் சண்டையிட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பெருமுக்கல் ஆட்டோல்டேண்ட் அருகே நடந்து வந்துள்ளார். பின்பு மனம் மாறிய அந்த பெண் சரண்ராஜிடம் தன்னை வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கேட்டுள்ளார். அந்த பெண்ணை ஆட்டவில் அமர வைத்துக் கொண்டு ஆட்டோ ஓட்டி சென்ற சரன்ராஜ் அந்த பெண் சொன்ன வழி மாறி அச்சம் அடையும் வகையிலான மலை அடிவாரத்தில் உள்ள முட்புதாருக்குள் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் ஏன் வேறு பாதையில் செல்கின்றீர்கள் என்று கூச்சலிட்டவாறு ஆட்டோவில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது சரண்ராஜ் அந்த பெண்ணின் ஆடைகளை பிடித்து இழுத்து கற்பழிக்க முயன்றுள்ளார்.உடனே அந்த பெண் கூச்சலிட்டவாறு ஓடியதால் அங்கிருந்த ஒரு நபர் அந்த பெண்ணை காப்பாற்றி உள்ளார். பின்பு அந்த நபரின் உதவியோடு அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்க்கு வந்த அந்த பெண்ணின் கணவர் இது குறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார்அளிஹத்துள்ளார்.புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுனர் சரண்ராஜை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி கற்பழிக்க முயன்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :