மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது...

by Staff / 03-10-2022 11:37:45am
மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது...

மங்கள்யான் விண்கலத்தில் தற்போது எரிபொருள் காலியாகிவிட்டது. அதன் பேட்டரியும் செயலிழந்துவிட்டது. அந்த விண்கலத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுகுறித்து இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் கூறவில்லை. கிரகணம் காரணமாக அந்த விண்கலத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது. அடிக்கடி கிரகணங்கள் நிகழ்ந்தன. அதிலும் ஒரு கிரகணம் 7½ மணி நேரம் நீடித்தது. அந்த விண்கலம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் கிரகணத்தை தாங்கும் வகையில்தான் பேட்டரி அமைக்கப்பட்டது. நீண்ட நேரம் கிரகணம் நீடித்தால் அதனால் பேட்டரி செயல்படும் திறன் குறைந்துவிடும். இந்த மங்கள்யான் விண்கலம் சுமார் 8 ஆண்டுகள் செயல்பட்டுள்ளது. அது 6 மாதங்கள் வரை செயல்படும் வகையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via