குஜராத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி.

by Staff / 03-10-2022 11:27:16am
குஜராத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி.

குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அரசியல் நோக்கர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஏ.பி.பி. நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்புகளை நடத்தி உள்ளன. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முக்கியமாக குஜராத்தில் மீண்டும் பா.ஜனதாவே ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இமாசல பிரதேசத்திலும் ஆட்சியை தக்க வைக்கும் என்றும் தெரிய வந்து இருக்கிறது.

 

Tags :

Share via