மதுரை- கோயம்புத்தூர் நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து அனுமதி- பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் விஜய் று கோரிக்கை

by Admin / 12-10-2026 12:26:36am
 மதுரை- கோயம்புத்தூர் நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து அனுமதி- பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் விஜய் று கோரிக்கை

சென்னை ஐஐடியில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 13,000 கோடி மதிப்பிலான பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் பல்வேறு கோரிக்கைகளை மேடையில் முன் வைத்தார். அவர் வைத்த கோரிக்கைகளை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மதுரை- கோயம்புத்தூர் நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஓசூர் நகரை கர்நாடகாவில் பொம் ம சந்திராவுடன் இணைத்து இரு மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர வேண்டும் தமிழகத்திற்கு வரவேண்டிய ஐயாயிரத்து நூத்தி பத்து கோடி நிலுவையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் சென்னை கன்னியாகுமரி மற்றும் சென்னை கோயம்புத்தூர் இடையே அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க வேண்டும் என்றும் கோதாவரி காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயலாற்றும் பொழுது பலன்கள் பொதுமக்களை விரைவில் சென்று அடையும் என்றும் அவர் இந்த விழாவில் பிரதமரிடம் வலியுறுத்தி வேண்டுகோளை வைத்தார்.

 மதுரை- கோயம்புத்தூர் நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து அனுமதி- பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் விஜய் று கோரிக்கை
 

Tags :

Share via

More stories

Logo