அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில்  துப்பாக்கி சூடு, 2 பேர் பலி, 12 பேர் காயம்,

by Editor / 24-09-2021 05:57:16pm
அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில்  துப்பாக்கி சூடு, 2 பேர் பலி, 12 பேர் காயம்,


அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள கோழி வரவில்லை என்ற நகரில் உணவுப் பொருள்கள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டில் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்  ஒருவர் உயிரிழந்தார் 12 பேர் படுகாயமடைந்தனர்.
 பின்னர் துப்பாக்கியால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்தவர்களை சுட்ட ஆசாமியும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
 துப்பாக்கி சூடு பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து அங்கு வந்து கூடினர் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்லும் முன்னரே அங்கு துப்பாக்கி சூடு ஓய்ந்துவிட்டது
 சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த போலீசார் ஃப்ரீசர் போன்ற மறைவிடங்களில் பதுங்கி இருந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்களை காப்பாற்றினார்கள்.சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் பலர் கூரைகளில் பதுங்கி இருந்தார்கள் அவர்களும் மீட்கப்பட்டனர்.
 போலீசார் மேலும் சூப்பர் மார்க்கெட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ஒருவரை கண்டுபிடித்தனர் அந்த ஆசாமி தான் துப்பாக்கி சூடு நடத்தியவர் என்று சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் உறுதி செய்தனர்.
துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வரும் துப்பாக்கியால் சுட்ட வரும் யார் என்பதை போலீசார் வெளியிடவில்லை. இன்னும் அடையாளம் தெரியவில்லை என்று தெரிவித்தனர் துப்பாக்கி சூட்டுக்கு காரணம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் 4 பேர் உயிர் ஊசலாடும் நிலையில் இருப்பதாக போலீஸ் தலைவர் டேல் லேன் தெரிவித்தார். 

 

Tags :

Share via