மரத்தின் மீது கார் மோதி விபத்து.3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

by Staff / 21-05-2022 02:49:18pm
மரத்தின் மீது கார் மோதி விபத்து.3 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டத்திற்குட்பட்ட பென்னேகட்டே என்ற கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், மன்சூரா என்ற கிராமத்தில் நடைபெற்ற தங்களது உறவினரின் திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு, மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளனர்.

அப்போது 13 பேர் ஒரே காரில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வேகமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்விபத்து தொடர்பாக தகவலறிந்து சென்ற போலீசார், விபத்தில் சிக்கியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories