இந்திய பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்அமெரிக்க அதிபர் ட்ரம்ப். .
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய ரஷ்யாடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் . ரஷ்யாடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்தாத பட்சத்தில் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என இந்தியா மீது அமெரிக்கா அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா -ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவில்லை என்றால் இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்திய வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர் .கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்திய பொருள்களுக்கு அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்திருந்தது. இந்நிலையில் ,இந்திய ரஷ்யாவிட மிருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்துவதாக பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார். ஆனால் ,இந்தியா அந்த கருத்துக்களில் இருந்து விலகிய இருந்தது. மேலும் இந்திய தூதரும் பதில் அளித்தார். இது குறித்து ஒரு சிக்கலான சூழ்நிலை உருவாகி இருந்தது. தற்பொழுது, இந்திய ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய்வாங்குவது தனக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட்ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Tags :



















