வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு. 

by Staff / 14-09-2025 07:42:09pm
 வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு. 

 கோவை மாவட்டம் வால்பாறை ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும், வால்பாறை பகுதியில் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை  அதிகரிப்பு. கண்களுக்கு குளிர்ச்சியான தேயிலை தோட்டங்களும்.,,அடந்த வனப்பகுதியும்.கண்ணுக்கு குளிர்ச்சியாக பணி துள்ளிகள், மற்றும் சில்லென்று காற்றும், கண்டு ரசிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கிறது. வால்பாறை டவுன் இருந்து 18 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள  சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில்  குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் ஆற்றுப்பகுதியில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தபட்டது. நீர்வீழ்ச்சியில்  குளிக்க கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது. வால்பாறையில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் மட்டும்.. மற்றும் விடுமுறை நாட்களில் மற்றும் சுற்றுலா பயணிகளை நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.வனத்துறை  கட்டணமாக  ஒரு நபருக்கு  ஐம்பது ரூபாய்  பெற்றுக் கொண்டு நீர்வீழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய நிலையில்   நீர்வீழ்ச்சி பகுதியில் பழுத்கியுள்ள தூரி பாலம் சரி செய்ய வேண்டும் என்றும் கழிவறை அமைத்துதார வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 

 

Tags :  வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு. 

Share via

More stories