ஆஸ்திரேலியாவில் சோகம்.. 4 இந்தியர்கள் பலி

by Staff / 25-01-2024 05:36:58pm
ஆஸ்திரேலியாவில் சோகம்.. 4 இந்தியர்கள் பலி

ஆஸ்திரேலியாவில் பயங்கர சோக சம்பவம் நடந்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் உள்ள பிலிப் தீவின் கடற்கரையில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர். இந்த சம்பவம் குறித்து ‌கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. உதவிக்காக இறந்தவரின் நண்பர்களுடன் அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via