ஓணம் பண்டிகை - தமிழிசை வாழ்த்து

by Staff / 28-08-2023 12:39:55pm
ஓணம் பண்டிகை - தமிழிசை வாழ்த்து

கேரள மாநில மக்களின் முக்கிய பண்டியான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மலையாள மொழி பேசும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய ஓணம் பண்டிகை நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேச ஒற்றுமையுடன், நேசத்துடன் கேரளத்து சகோதர, சகோதரிகள் அனைத்து செல்வங்களும், இன்பங்களும் பெறவும், ஓணம் பண்டிகையன்று இடும் பூக்கோலத்தை போலவே அவர்கள் வாழ்க்கையும் மலர்ந்திருக்க வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்'' என பதிவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via
Logo