நன்கொடை கொடுக்காததால் டாஸ்மாக் ஊழியர் மீது பீர் பாட்டில் குத்து

திருவாரூர் அருகே கானூர் அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாலையில் மதுபானகடையில் இருந்தபோது, சேமங்கலம் பகுதியை சேர்ந்த சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவினர் கோவில் திருவிழாவிற்கு நன்கொடை வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு மேற்பார்வையாளர் ரமேஷ் பணம் கொடுக்க மறுத்த நிலையில், ரமேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலை உடைத்து ரமேஷை குத்தியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த ரமேஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலறிந்த திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய 5 பேர் கொண்ட கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை 18 ஆம் தேதி கடையடைப்பு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Tags : Beer bottle punch on Tasmac employee for not donating