நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பொருளாதார துறைக்கான புதிய கட்டிட திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறைக்கான புதிய கட்டிட திறப்பு விழா இன்று பல்கலைக்கழக வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கட்டிடமானது திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களது சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து சுமார். 50 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மேசை, நாற்காலி போன்ற உபகரணங்களுடன் மாணவர்கள் நலனுக்காக கட்டி தரப்பட்டுள்ளன.இக்கட்டிடத்தினை விழாவின் சிறப்பு விருந்தினர் மகாராஷ்டிர மாநில ஆளுநர் மேதகு திரு. C.P. ராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்து குத்து விளக்கேற்றி மாணவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களுடன் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் விழாவினை தலைமையேற்று வழிநடத்தினார்.
இவ்விழாவில் பல்கலைகழக துணைவேந்தர் பேரா. ந. சந்திரசேகர், பல்கலைக்கழக பதிவாளர் பேரா. ஜே. சாக்ரடீஸ், பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியன் மற்றும் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags :