ஆம்ஸ்ட்ராங் படுகொலை;வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொளிக்காட்சி மூலம் விசாரணை.

by Editor / 06-07-2024 11:42:39pm
 ஆம்ஸ்ட்ராங்  படுகொலை;வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொளிக்காட்சி மூலம் விசாரணை.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூர் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதியளித்ததால் இன்றிரவே நீதிபதி அனிதா சுமந்த் வீட்டில் விசாரணை நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால், தற்போது இந்த வழக்கு நாளை காலை 9 மணிக்கு காணொளிக்காட்சி மூலம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க உள்ளார்.

 

Tags : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்

Share via

More stories