புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய 3 பேருக்கு ஆயுள்தண்டனை.

மாஞ்சோலை தோட்ட மேலாளர் அந்தோணி முத்து என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டவழக்கில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்பட 11 மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காகபாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி.திருநெல்வேலி மாநகரம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில்அவரது கார் வரும்போது அவர் மீது கடந்த 2004 ம் ஆண்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட வன்கொடுமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தவழக்கில் 12 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் லட்சுமணன், சிவா என்ற சிவலிங்கம்,தங்கவேலு ஆகிய மூன்று நபர்களுக்கு ஆயுள் தண்டனையும்,தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை நீதிமன்றம் தீர்ப்பு.அளித்தது.மற்ற ஒன்பது பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு.
Tags : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசிய 3 பேருக்கு ஆயுள்தண்டனை.