தனியார் பள்ளி பேரூந்து ஓட்டுநர் சலவைத்தொழிலாளியை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை இஸ்திரி தொழிலாளி அய்யனார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பள்ளி குழந்தைகளுடன் வந்த தனியார் பள்ளி வேன் அதி வேகமாக செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்த இஸ்திரி தொழிலாளி அய்யனார் பள்ளி வேன்-ஐ மடக்கி இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி வேன் ஓட்டுநர் இஸ்திரி தொழிலாளியை கைகளால் சரமாரியாக தாக்கியதில் தொழிலாளி அய்யனார் மூக்கு,வாய்,உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவரை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் வாகன மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சைக்கு செல்லாமலே டாக்டர் இல்லை என்றும், சங்கரன்கோவில் பகுதியில் போலீசார் சரியில்லை என்றும் ஒழுக்கம் இல்லை எனவும் தெரிவித்த அய்யனார்,
என்ன இரத்த காயம் என்ற கேட்ட போது ஓவர்ஸ்பிட் ஆ போனா கேட்டதுக்கு அடிக்கான் என்றும் தெரிவித்த அய்யனார் நான் நெல்லை ஹைகிரவுண்ட் மருத்துவமனை போவதாக தெரிவித்தார். பின்னர் மருந்துமனை ஊழியர்கள் அறிவுறுத்தலின் பெயரில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று சென்றார்.மேலும் இஸ்திரி தொழிலாளியை சரமாரியாக தாக்கி விட்டு சென்ற தனியார் பள்ளி வேன் ஓட்டுனரை நகர காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் சாலையில் தொழிலாளியை தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. -
Tags : தனியார் பள்ளி பேரூந்து ஓட்டுநர் சலவைத்தொழிலாளியை தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.