தென்காசியில் நிறுத்தமில்லாத எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்களுக்கு ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) ஜூன் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) ஜூன் 5 முதல் ஆகஸ்ட் 7 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயன்குளம், சாஸ்தான் கோட்டை, கொல்லம், குன்டரா, கொட்டாரக்கரா, அவனிஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தற்போது இந்த ரயில்கள் நாகப்பட்டினம் வரை மட்டுமே இயக்கப்படும். வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.என்று தெரிவித்துள்ளது தென்னக ரயில்வே அதே சமயம் தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்ற பகுதியான தென்காசியை சுற்றி ஏராளமான கிராமங்கள்,நகரங்கள் உள்ளன இங்கு வசிக்கும் மக்கள் ஏராளமானவர்கள் அந்தபகுதிகளில் வசித்துவருகின்றனர்.ஆனால் தென்காசியில் இந்த ரயிலுக்கு நிறுத்தமில்லை என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இயக்கப்பட்ட எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசியில் நிறுத்தம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : Non-stop Ernakulam-Velankanni special train at Tenkasi