தமிழக-கேரள எல்லையில் காட்டாற்று வெள்ளம் - மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு.

by Staff / 25-06-2025 10:46:37pm
தமிழக-கேரள எல்லையில்  காட்டாற்று வெள்ளம் - மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் தமிழக -கேரள எல்லைப் பகுதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவில் செல்லும் சாலையில் உள்ள கும்பாவுருட்டி அருவியை ஒட்டியுள்ள கேரளா வனத்துறை அலுவலகம் அருகே உள்ள சாலையில் உள்ள ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக அந்த சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்த நிலையில், அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சாதுரியமாக செயல்பட்டு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்ட நிலையில், இது போன்று அந்த பகுதியில் உள்ள மூன்று ஆறுகளில் கடுமையான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அச்சன்கோவில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும், தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டுடன் அந்த சாலை கடக்குமாறு வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தமிழக-கேரள எல்லையில் காட்டாற்று வெள்ளம் - மோட்டார் சைக்கிளை இழுத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு.

Share via