காவலர் கொலை வழக்கு கொலையாளிக்கு மதுரையில் சிகிச்சை.

by Editor / 30-03-2025 08:36:38am
காவலர் கொலை வழக்கு கொலையாளிக்கு மதுரையில் சிகிச்சை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 2009ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்து தற்போது உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 27ஆம் தேதியன்று பணியை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றவர். மதியம் முத்தையன்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதாகி வெளியே வந்த நபர்களுக்கு அறிவுரை கூறும் போது ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து., நாவார்பட்டி அருகே ஹரிஹரன் என்பவரது தோட்டத்தில் வைத்து காவலர் முத்துக்குமார் கல்லால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

காவலருடன் வந்த கள்ளப்பட்டியை சேர்ந்த ராஜாராம் சம்பவத்தில் தடுக்க முற்பட்டபோது அவரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து, அவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனை தொடர்ந்து., அவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்து சென்றனர்.

பிரேத பரிசோதனை செய்து அவரது உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் முயன்ற நிலையில் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலை செய்யப்பட்ட காவலர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு உரிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் அவரது மனைவிக்கு அரசு வழங்க வேண்டும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த்., தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத்., சிவகங்கை மாவட்ட எஸ்பி அஷிஷ் ராவத்., தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா பேச்சுவார்த்தை நடத்தி அவரது உடல் நேற்று  காலை ஒப்படைக்கப்பட்டு விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் அவரது சொந்த ஊரான கள்ளப்பட்டி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க உறவினர்கள் முன்னிலையில் காவலர் முத்துக்குமார் உடல் எரியூட்டப்பட்டது.

காவலர் முத்துக்குமார் கொல்லப்பட்ட வழக்கில் அவரை கொலை செய்த பொன்வண்ணன் மற்றும் கூட்டாளிகளை கண்டுபிடிக்க மதுரையில் எஸ்பி தலைமையில் 2 தனிப்படையும், தேனியில் 4 தனிப்படை என மொத்தம் 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில்., பொன் வண்ணன் உட்பட 4 பேரையும் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு அருகே கொலையாளிகள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது காவல்துறையை தாக்கி விட்டு தப்பும் முயன்றனர்.

தொடர்ந்து., இந்த சம்பவத்தில் காவலர் ஒருவர் காயமடைந்தார். இந்த நிலையில் பொன்வண்ணனை போலீசார் மூன்று முறை சுட்டதில் அவர் படுகாயத்துடன் பிடிக்கப்பட்டார். 

இதில் படுகாயம் அடைந்த பொன்வண்ணன் தேனி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது கூட்டாளிகளுக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்த பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags : காவலர் கொலை வழக்கு கொலையாளிக்கு மதுரையில் சிகிச்சை.

Share via