சென்னையிலிருந்து ரயில்மூலமாக வேலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னையிலிருந்து ரயில்மூலமாக வேலூர் மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூரில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்கள் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் சென்றார்.
இதற்காக சென்னையில் இருந்து சாய்நகர் சீரடி விரைவு ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின், காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர், வேலூர் சென்ற நிலையில் வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுகவினர் பொதுமக்களுடன் சேர்ந்து மேள தாளங்களுடன் முதலமைச்சரை மலர் தூவி வரவேற்றனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே வந்தடைந்ததும் வாகனத்தில் இருந்து இறங்கி, மாவட்ட திமுக அலுவலகம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ஆர்வமாக முதலமைச்சருடன் கைக்குலுக்கினர்.
Tags : சென்னையிலிருந்து ரயில்மூலமாக வேலூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.