.4400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

by Staff / 12-05-2023 11:45:38am
.4400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

குஜராத்தில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இது தவிர, மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 19,000 பயனாளிகளுக்கு வீடுகளும் வழங்கப்படும். இன்று குஜராத் வரும் மோடி காந்திநகரில் நடைபெறும் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷனிலும் கலந்து கொள்கிறார். அனைத்திந்திய தொடக்க ஆசிரியர் கூட்டமைப்பின் 29வது மாநாடு இதுவாகும். காந்திநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.2,450 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். டெக்-சிட்டிக்கு செல்லும் மோடி, பல்வேறு திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வார்.

 

Tags :

Share via

More stories