அமெரிக்கா- ஈரான் உடனான இரண்டு வார கால போர் நிறுத்தம் புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

by Admin / 21-04-2026 09:56:02am
அமெரிக்கா- ஈரான் உடனான இரண்டு வார கால போர் நிறுத்தம்  புதன்கிழமையுடன் முடிவடைகிறது.

அமெரிக்கா- ஈரான் உடனான இரண்டு வார கால போர் நிறுத்தம் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. தற்போதைய போர் நிறுத்தத்தை நீடிப்பது மிகவும் சாத்தியமற்றது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஒரு முறையான நடவடிக்கை எட்டப்படாவிட்டால் போர் நிறுத்தத்தை நீட்டிக்க போவதில்லை என்றும் மீண்டும் தாக்குதல்கள் தொடங்க கூடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே டி ஒன்ஸ் தலைமையிலான குழு இன்று பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட அமைதிபேச்சு வார்த்தைக்காக செல்ல உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சு வார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. ஹார்முஸ் ஜன சந்தியில் அமெரிக்க விதித்துள்ள கடல் வழி தடையை நீக்காத வரை ஈரான் பேச்சு வார்த்தையில் பங்கேற்காது என்கிற கருத்தும் நிலவுகிறது. இதற்கிடையே ஒரு நல்ல செய்தி வரும் என்கிற நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக விட்டால் போர் மீண்டும் தீவிரமடையும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்,ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட 'தௌஸ்கா' என்ற கொள்கலன் கப்பலை அமெரிக்கக் கடற்படை கைப்பற்றியது. அந்தக் கப்பல் "இரட்டைப் பயன்பாட்டு" இராணுவப் பொருட்களை ஏற்றிச் சென்றதாக அமெரிக்கா கூறுகிறது, அதே நேரத்தில் ஈரான் இந்தக் கைப்பற்றலை "போர்க்குற்றம்" என்றும் போர் நிறுத்த மீறல் என்றும் முத்திரை குத்தியுள்ளது.

அமெரிக்கா- ஈரான் உடனான இரண்டு வார கால போர் நிறுத்தம்  புதன்கிழமையுடன் முடிவடைகிறது.
 

Tags :

Share via
Logo