மெக்ரூன்ஸ் செய்முறை

by Admin / 13-08-2021 11:32:41am
மெக்ரூன்ஸ் செய்முறை

தேவை

முட்டை (வெள்ளைக்கரு) – 4

முந்திரிப்பருப்பு துருவியது – 250 மி.லி

சீனி – 250 மி.லி.

செய்முறை

முட்டை வெள்ளைக் கருவை சிறிதுகூட மஞ்சள் கலக்காமல் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முள்கரண்டி வைத்து வெள்ளைக்கருவை நன்கு நுரை பொங்க பாத்திரத்தைக் கவிழ்த்தால் கீழே விழாமல் இருப்பது வரை அடிக்கவும். சீனியையும் சிறிது சிறிதாகக் கலக்கி அடித்தால் வெள்ளைப்பனிமலை போல் பொங்கி வரும். 30 – 35 நிமிடம் ஆகும். நறுக்கிய முந்திரிப்பருப்பை மெதுவாக முட்டை வெள்ளைக் கருவுடன் (fold on) சேர்த்து நெய் தடவிய தட்டில் இடைவெளி விட்டு ஒரு மேஜைக்கரண்டி கலவையைக் கூம்பு வடிவமாக வரும் மாதிரி ஊற்றி 100-150 டிகிரி சூட்டில் வேக வைக்கவும்.

 

Tags :

Share via