வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை டிரைவர் தாக்கியதாக காயங்களோடு மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 25-07-2023 08:35:58pm
வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரை டிரைவர் தாக்கியதாக காயங்களோடு மருத்துவமனையில் அனுமதி.

தூத்துக்குடி அனல் மின் நிலைய குடியிருப்பு கேம்ப் 1அருகே துறைமுகத்திலிருந்து லோடு ஏற்றி வந்த லாரி டிரைவரை வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்  பெலிக்ஸ் உள்ளிட்ட சிலர் தாக்கியதால் டிரைவர் படுகாயம்அடைந்ததாக கூறப்படுகிறது. வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்  பெலிக்ஸ் டிரைவரை தாக்கியதை கண்டித்து துறைமுக சாலையில் லாரிகளை  நிறுத்தி டிரைவர்கள் சுமார் ஒரு மணி நேரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.மேலும் நூற்றுக்கணக்கான லாரிகளை நிறுத்தி போராட்டம்த்தில் ஈடுபட்டதால்   போக்குவரத்து பாதிப்புஉருவானது.இந்தநிலையில் தூத்துக்குடி துறைமுக சாலையில் வாகன சோதனையின் போது லாரி டிரைவர்   வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸை  கடுமையாக தாக்கியதாக  ரத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தசம்பவம் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் செல்லும் அனைத்து போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. இதனையடுத்து தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி. சத்தியராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

Tags :

Share via