த வெ க மாநாடும்  தலைவர்கள் கருத்தும்.. 

by Editor / 28-10-2024 11:47:10pm
த வெ க மாநாடும்  தலைவர்கள் கருத்தும்.. 

நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது.இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர் கள் விமர்சித்துவருகின்றனர்.

 தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா.
ஆளுநர் தேவையில்லை என கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும்? ஆளுநர் குறித்து சர்ச்சையாக பேசுவது அறிவிலித்தனம். இன்று தி.மு.க-வும், காங்கிரசும் பேசுவது பொய்த்தனம். தி.மு.க சொல்வதை பாலோ செய்து பேசினால் தான் நமக்கு சோறு வேகும் என விஜய் நினைக்கின்றார். நடிகர் விஜய் அந்த சித்ததாந்தை பேசினால் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான் 


விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி.

"திரையுலகத்தில் பெற்றுள்ள புகழ், செல்வாக்கு, அரசியல் உலகத்திற்கு வரும் போது பரிமாற்றம் பெறும் என சொல்ல முடியாது. அதுவும் இன்றைய சூழலில் அது வாய்ப்பில்லை. ஒரு அடி மாநாடு அடுத்த அடி கோட்டை என்ற வகையில் அவரது கற்பனை அதீதமாக உள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. அரசியலில் வேகமாக இலக்கை அடையலாம், ஆனால் படிப்படியாகத்தான் உயர முடியும்" என தவெ கதலைவர் விஜய்யை விமர்சித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.இயக்குநர் சங்கர் படம் போல விஜய் மாநாடு பிரமாண்டமாக இருந்தது. விஜய் பட ஓப்பனிங் போல தவெக மாநாடு சிறப்பாக இருந்தது. போகபோகத்தான் கட்சி செயல்பாடுகள் எல்லாம் தெரியும். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் அருமையாக பேசினார். கமல்ஹாசனை காட்டிலும் விஜய் சூப்பராக பேசினார். 

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்;

 “விஜய் ஒரு தேர்தலை பார்த்தபிறகு முடிவு செய்து கொள்ளலாம். எத்தனை கூட்டம் வந்தாலும் வாக்கு பெட்டியில் என்ன விழுகிறது என்பது தான் விஷயம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கருத்துகளை விஜய் கூறியது வரவேற்கத்தக்கது. நேரடியாக திமுகவை பார்த்து விஜய் கேட்ட கேள்வி நியாயமானதுதான்” என்றார்.


 

 

Tags : த வெ க மாநாடும்  தலைவர்கள் கருத்தும்.. 

Share via