இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்புத்தொழுகை நடைப்பெற்றது.

by Editor / 22-04-2023 08:50:16am
இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்புத்தொழுகை நடைப்பெற்றது.

தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் கொண்டாடலாம் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று பிறை தென்பட்டதை அடுத்து இன்று (ஏப்.22) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகின்றது. காலை 6 மணிமுதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள்,மைதானங்களில் சிறப்புத்தொழுகை  இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் ஈகை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏழை மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கி ஒவ்வொருவரும் தங்களின் ஈகை பண்பை வெளிப்படுத்துவர். வானில் தோன்றும் பிறை நிலவைக் கொண்டே இந்த நாள் முடிவு செய்யப்படுகிறது.


 

 

Tags :

Share via