கர்நாடக மாநில காவல்துறை தலைவர் பிரவீன் சூட் சி. பி. ஐ இயக்குனராக நியமனம்.

by Admin / 14-05-2023 04:42:23pm
கர்நாடக மாநில காவல்துறை தலைவர் பிரவீன் சூட்  சி. பி. ஐ இயக்குனராக நியமனம்.

கர்நாடக மாநில காவல்துறை தலைவர்  பிரவீன் சூட் சி பி ஐ இயக்குனராக நியமனம். இவர் இரண்டு ஆண்டுகள் இந்த பதவி வகிப்பார்.. சி பி ஐ இயக்குனராக இருந்தசுபோத் குமார்ஜெய்ஷ் வாலின் பதவிக்காலம் நிறைவு அடைவதை தொடர்ந்து மத்திய  அமைச்சகம் இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரவீன் சூட், ஹிமாச்சல பிரதேசத்தில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். அவரது தந்தை, மறைந்த ஓம் பிரகாஷ் சூட், தாயார், மறைந்த கமலேஷ் சூட், . பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பிரவீன் ஐஐடி ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற ஐஐடி - டெல்லியில் பி.டெக் படித்துள்ளார்/. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உடன். பி.டெக்.க்கு பிறகு  சிவில் சர்வீசஸ் செல்ல முடிவு செய்தார்.  முதல் முயற்சியிலேயே UPSC CSEயில் தேர்ச்சி பெற்று கர்நாடக கேடருடன் ஐபிஎஸ் பெற்றார்.

பிரவீன் சூட் 1989 இல் மைசூருவில் முதன்முதலில் பதவியேற்றார்..


பிரவீன் சூட்  மகள் இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வாலை திருமணம் செய்து கொண்டாா். இவரது மனைவி வினிதா  தொழிலதிபர். இரண்டு மகள்கள் உள்ளனர்,

கர்நாடக மாநில காவல்துறை தலைவர் பிரவீன் சூட்  சி. பி. ஐ இயக்குனராக நியமனம்.
 

Tags :

Share via