தமிழ்நாட்டை தவிர்க்கக் கூடியவர்களுக்கு மீண்டும் தமிழகத்தில் இடமில்லை மக்கள் உணர்த்திட வேண்டும்-முதல்வர்.

by Editor / 07-04-2025 05:59:01am
தமிழ்நாட்டை தவிர்க்கக் கூடியவர்களுக்கு மீண்டும் தமிழகத்தில் இடமில்லை மக்கள் உணர்த்திட வேண்டும்-முதல்வர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை கொடிசியா மைதானத்தில் 16,000 பெண்கள் வள்ளி கும்மி கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாராட்டினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது.

தமிழ்நாட்டை தவிர்க்கக் கூடியவர்களுக்கு மீண்டும் தமிழகத்தில் இடமில்லை என்பதை நீங்கள் உணர்த்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொங்கு நாடு கலைக்குழுவினர் 2024 ஆம் ஆண்டு 16,000 பெண்கள் இணைந்து வள்ளி கும்மி ஆடி என்ன சாதனை படைத்ததற்கு இன்று பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய தினமும் 16,000 பெண்கள் இணைந்து வள்ளி கும்மி நிகழ்ச்சி நடத்தினர். இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் நரைமேடுகள் சென்று 16000 வள்ளிகும்மி கின்னஸ் சாதனை புரிந்த பெண்களையும் பார்வையிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியன் போது கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளி கும்மிக்கும் நடன குழுவினர் கலக்கி விட்டீர்கள். பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என்று கலக்கி விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான். என்றார்.

 

Tags : தமிழ்நாட்டை தவிர்க்கக் கூடியவர்களுக்கு மீண்டும் தமிழகத்தில் இடமில்லை மக்கள் உணர்த்திட வேண்டும்-முதல்வர்.

Share via