நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.

by Editor / 07-04-2025 05:53:35am
நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது. நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதன் விளைவாக முட்டை விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், முட்டைக்கோழி கிலோ ரூ.85-க்கும், கறிக்கோழி கிலோ ரூ.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags : நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்தது.

Share via

More stories

Logo