by Staff /
27-06-2023
03:04:27pm
மத்தியப்பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆளுநர் மங்குபாய் சி படேல் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில்களுடன் சேர்ந்து நாட்டில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
Tags :
Share via