ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து

by Staff / 27-03-2024 11:38:25am
ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து

டானாபூரில் இருந்து லோக்மான்ய திலக் டெர்மினஸ் நோக்கிச் சென்ற ஹோலி சிறப்பு ரயிலில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. பீகாரில் உள்ள அர்ரா நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் பெட்டி எண் எம்-9ல் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. தீயைக் கண்டு பயந்து, ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் கீழே குதித்தனர். இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 11:12 மணிக்கு டானாபூரில் இருந்து புறப்பட்டது.

 

Tags :

Share via

More stories