கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்:

by Editor / 22-04-2021 09:24:00am
கொரோனாவுக்கு பலியான சீதாராம் யெச்சூரி மகன்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மகன் ஆசிஷ் யெச்சூரி கொரோனாவுக்கு பலியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆசிஷ் யெச்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். எனது மகன் கொரோனாவுக்கு பலியானதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், நர்ஸ்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றி என உருக்கமாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்

இந்த டுவிட்டை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் அரசியல்வாதி ஒருவரின் மகன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :

Share via

More stories